/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடையிலும் வற்றாத கைகுளான் ஊருணி
/
கோடையிலும் வற்றாத கைகுளான் ஊருணி
ADDED : மே 25, 2024 05:34 AM

தொண்டி : தொண்டி கைகுளான் ஊருணி கோடையிலும் வற்றாமல் தண்ணீர் நிரம்பியுள்ளது.
தொண்டியில் வட்டாணம் செல்லும் ரோட்டில் கைகுளான் ஊருணி குடிநீர் ஊருணியாக பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த ஊருணி, கோடை காலத்திலும் வற்றாமல் நீர் நிரம்பியுள்ளது. இதனால் அருகில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், மன்னர்கள் காலத்தில் இந்த ஊருணி அமைக்கப்பட்டது. அருகில் உள்ள பல ஊருணிகள் வற்றிய நிலையில் கைகுளான் ஊருணியில் இன்னமும் தண்ணீர் தேங்கியிருப்பது பயனுள்ளதாக உள்ளது. சமீபத்தில் பெய்த கோடை மழையும் கைகொடுத்துள்ளது.
இரவில் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை ஊருணிக்குள் வீசி அசுத்தம் செய்வதால் ஊருணி மாசுபடுகிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

