/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே ஏ4 சீட்டில் 100 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டு வைத்திருந்தவர் கைது

ADDED : செப் 13, 2024 09:33 PM

பரமக்குடி:ஏ 4 பேப்பரில் 100 ரூபாய் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த வாலிபரை சத்திரக்குடி போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன் கோட்டை கிராமத்தில், ஏ 4 பேப்பரில் 100 ரூபாய் ஜெராக்ஸ் எடுத்து 78 ஏ 4 பேப்பர் வைத்திருந்தார். இதன்படி 78 தாளில் நான்கு நோட்டுகள் வீதம் 31,200 மற்றும் 4 உதிரிதாள்கள் என 31,600 ரூபாய் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதன் பெயரில் காமன் கோட்டையைச் சார்ந்த கணேசன் மகன் கார்த்திக் 25, கை சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் மணியன் கைது செய்தார்.
இந்த வாலிபர்கோவையில் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிய நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஜெராக்ஸ் நோட்டை வாங்கி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் நோக்கில் ஜெராக்ஸ் வைத்திருந்ததாக போலீசார் விசாரிக்கின்றனர்.