/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை செல்ல முயன்றவர் தனுஷ்கோடியில் கைது
/
இலங்கை செல்ல முயன்றவர் தனுஷ்கோடியில் கைது
ADDED : செப் 16, 2024 01:36 AM

ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோசப் ஜான்சன் மகன் பகீரதன், 37. இவர் ஜூன் 6ல் விமானத்தில் சென்னை வந்தார்.
பின், தர்மபுரி மாவட்டம் அரூரில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினார். அங்கிருந்து விமானத்தில் பிரான்ஸ் செல்ல முடிவு செய்த நிலையில், சில நாள்களுக்கு முன், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் மதுபோதையில் மயங்கி கிடந்தார். அப்போது இவரிடம் இருந்த பணம், பாஸ்போர்ட், விசா திருடு போயின.
இதனால் பிரான்ஸ் மற்றும் சொந்த நாட்டுக்கும் செல்ல முடியாமல் தவித்த பகீரதன், கள்ளத்தோணியில் இலங்கை செல்ல திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் தனுஷ்கோடி வந்த அவர், மீனவர்களை சந்தித்து இலங்கைக்கு கள்ளப்படகில் செல்ல எவ்வளவு பணம் வேண்டும் என ,பேரம் பேசினார். சுதாரித்த மீனவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தனுஷ்கோடி தனிப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் பகீரதனை பிடித்து விசாரித்தனர். அதன் பின், தனுஷ்கோடி போலீசார் பகீரதனை பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

