/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரே மாணவி படிக்கும் பள்ளியில் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் திட்டம் தோல்வி
/
ஒரே மாணவி படிக்கும் பள்ளியில் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் திட்டம் தோல்வி
ஒரே மாணவி படிக்கும் பள்ளியில் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் திட்டம் தோல்வி
ஒரே மாணவி படிக்கும் பள்ளியில் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் திட்டம் தோல்வி
ADDED : ஜூன் 25, 2024 10:36 PM

திருவாடானை: திருவாடானை அருகே கடம்பூர் அரசு தொடக்கபள்ளியில் ஒரு மாணவி மட்டுமே படிக்கும் நிலையில் அங்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் திட்டம் தோல்வியடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடம்பூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரே ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். அவருக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தினர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஜூன் 22ல் செய்தி வெளியானது. இதையடுத்து ஒரு ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார். தற்போது ஒரு மாணவிக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் பணியில் கல்வித்துறை அலுவலர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த இரு நாட்களாக அக்கிராமத்தில் முகாமிட்டு மக்களை சந்தித்து அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள், மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களை எடுத்துக் கூறினர். ஆனால் அக்கிராமத்தில் மாணவர்களே இல்லை என்பதும், தற்போது படிக்கும் மாணவியின் குடும்பத்தினர் வேறு கிராமத்திலிருந்து இங்கு வந்து தங்கியுள்ளதால் அவர் மட்டும் பள்ளிக்கு வருவதும் தெரியவந்தது.
இதனால் அப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் திட்டம் தோல்வியடைந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.