/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பு ஊருணி வழியில் பாதுகாப்பு சுவர் தேவை
/
உப்பு ஊருணி வழியில் பாதுகாப்பு சுவர் தேவை
ADDED : பிப் 15, 2025 05:49 AM

கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துசாமிபுரத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உப்பு ஊருணி அமைந்துள்ளது.
முத்துச்சாமிபுரத்தில் இருந்து உப்பு ஊருணி வழியாக சிவகாமிபுரம், லட்சுமிபுரம், காஞ்சிரங்குடி செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இதன் பக்கவாட்டு சுவர் ஏதும் இன்றி திறந்த வெளியாக உள்ளது. வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிவகாமிபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் வழியில் ஆபத்தான முறையில் திறந்தவெளி ஊருணியின் கீழ் மெகா பள்ளம் உள்ளதால் எதிர்பாராமல் வளைவில் திரும்புபவர்கள் அப்பகுதியில் விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி 5 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

