/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தே.மு.தி.க., நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
/
தே.மு.தி.க., நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 11:09 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் தே.மு.தி.க., சார்பில் தமிழகத்தில் கள்ள சாராய விற்பனையை கண்டித்தும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராமநாதன், துணைச் செயலாளர் வெள்ளையம்மாள், சாத்தான் வலசை ஊராட்சி உறுப்பினர் ஹரிஹரசுதன், ராமநாதபுரம் நகர் நிர்வாகி மணிமாறன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் குமார், ஒன்றிய செயலாளர் சந்தவழியான் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.