ADDED : ஏப் 27, 2024 04:17 AM

கமுதி: கமுதி--சாயல்குடி ரோடு செங்கப்படை அருகே பகவதி அம்மன், பரஞ்சோதி அம்மன், அக்னி வீரபத்திர சுவாமி, அய்யனார் கோயில்கள் ஒரே இடத்தில் உள்ளது.
இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் ரோட்டோரத்தில் காத்துஇருந்து செல்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை ரோடு விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது. அதன் பின் தற்போது வரை புதிய நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் சாலையோர மரம் நிழலில் ஆபத்தான முறையில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.
விழாக்காலங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.
எனவே கமுதி-- சாயல்குடி ரோட்டில் செங்கப்படை அருகே பக்தர்களின்நலன் கருதி புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

