/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடப்பதற்கே லாயகற்ற ரோடு; வல்லக்குளம் மக்கள் அவதி
/
நடப்பதற்கே லாயகற்ற ரோடு; வல்லக்குளம் மக்கள் அவதி
ADDED : செப் 01, 2024 11:41 PM
கமுதி: கமுதி அருகே வல்லக்குளம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அபிராமம் வீரசோழன் ரோடு வல்லக்குளம் விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு ரோடு அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படவில்லை. தற்போது ரோடு சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.
இவ்வழியில் பஸ் இயக்கப்படாததால் சரக்கு வாகனம், டூவீலரில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நடப்பதற்கே லாயகற்ற ரோடாக மாறியுள்ளது. விரதகுளம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. தார்ரோட்டை மராமத்து பணி செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.