/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரேயொரு மாணவி மட்டும் படித்த பள்ளி மூடல்
/
ஒரேயொரு மாணவி மட்டும் படித்த பள்ளி மூடல்
ADDED : ஜூன் 28, 2024 11:55 PM
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டுமே படித்தார்; இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
இதையடுத்து ஆசிரியர் ஒருவர் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார். ஒரு மாணவிக்கு ஓராசிரியர் என்ற நிலையில் பள்ளி செயல்பட்டது. அங்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் முயற்சித்தனர். எனினும், நிறைவேறவில்லை. அக்கிராமத்தில் மாணவர்களே இல்லாததாலும், தற்போது படித்த மாணவியின் குடும்பத்தினரும், அந்த ஊரிலிருந்து வெளியேறி விட்டதும் தெரிந்தது.
அதைத் தொடர்ந்து இப்பள்ளி நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டது. அங்கு படித்த மாணவி, குருமிலான்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பணிபுரிந்த ஆசிரியர் முள்ளிமுனை அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

