ADDED : ஜூன் 25, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே மேல அரும்பூர் கிராமத்தில் அங்கன்வாடி உள்ளது. நேற்று காலை 11:00 மணிக்கு குழந்தைகள் அமர்ந்திருந்தனர்.
அப்போது உணவுக்காக அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெளியேறிய ஒரு நாகப்பாம்பு ஊர்ந்து வந்தது.
அதை பார்த்த குழந்தைகள் அலறி அடித்து வெளியேறினர். திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.