/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற மாணவி
/
ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற மாணவி
ADDED : ஆக 01, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி ஜூடோ போட்டியில் தங்கம் வென்றார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியில் சப்-ஜூனியர் ஜூடோ போட்டிகள் ஜூலை 22 முதல் 26 வரை நடந்தது. இதில் பரமக்குடி இராமலிங்க விலாஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி லக்சிதா ஸ்ரீ பங்கேற்றார்.
பல்வேறு பள்ளி மாணவர்களை வென்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். மாணவியை பள்ளி தலைவர் செல்லம், செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.