/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : செப் 14, 2024 11:52 PM

உச்சிப்புளி : ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி சிப்காட் ஸ்டாப் பகுதியில் காரை முந்திச் செல்ல முயன்ற டூவீலர் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் உமர்பாரூக். தற்போது தங்கச்சிமடத்தில் குடியிருந்து வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் டூவீலர் ேஷாரூம் வைத்துள்ளார். இவரது மகன் இம்ரான் அஸ்லம் 23.
இவர் நேற்று காலை தங்கச்சிமடத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது உச்சிப்புளி சிப்காட் பஸ் ஸ்டாப் பகுதியில் வந்த போது காலை 10:40 மணிக்கு கோவையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற வாடகை காரை முந்தி செல்ல முயன்ற போது டூவீலர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் இம்ரான் அஸ்லம் பலியானார்.
உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.