/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் விபத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் பலியானார்
/
டூவீலர் விபத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் பலியானார்
டூவீலர் விபத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் பலியானார்
டூவீலர் விபத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் பலியானார்
ADDED : ஜூலை 14, 2024 04:02 AM
ராமநாதபுரம் : -டூவீலர் விபத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே கீரிப்பூர்வலசையை சேர்ந்தவர் சங்கர் 50. இவரது மகன் பிரதீபன் 21. கூலி வேலை செய்து வந்தார். ஜூலை 10 இரவு 10:30 மணிக்கு பணிகளை முடித்துவிட்டு ராமநாதபுரத்தில் இருந்து உறவினர் தவசி மகன் நிதீஷ் 25, டூவீலரில் வந்தார்.
டூவீலர் குயவன்குடி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இதில் பிரதீபன், நிதீஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில்மேல் சிகிச்சைக்காக பிரதீபன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உடல்நிலை மோசமானதால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
வரும் வழியில் பிரதீபன் இறந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.