/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறக்கப்படாத ரயில்வே பாலத்தில் டூவீலர் இயக்கும் போராட்டம்
/
திறக்கப்படாத ரயில்வே பாலத்தில் டூவீலர் இயக்கும் போராட்டம்
திறக்கப்படாத ரயில்வே பாலத்தில் டூவீலர் இயக்கும் போராட்டம்
திறக்கப்படாத ரயில்வே பாலத்தில் டூவீலர் இயக்கும் போராட்டம்
ADDED : செப் 16, 2024 05:11 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராததால் பாலத்தில் டூவீலர் இயக்கும் போராட்டம் செப்., 26ல் நடத்த சி.ஐ.டி.யு., வினர் முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 30 கோடி ரூபாயில் 2018ல் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியது. 2020 ல் முடிக்கப்பட வேண்டிய பணிகள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2024 வரை பணிகள் நடந்தது. தாமதமாக கட்டப்பட்ட மேம்பால பணிகள் நிறைவு பெற்று 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதன் காரணமாக கீழக்கரை வழியாக செல்லும் ஏர்வாடி, சாயல்குடி, துாத்துக்குடி, திசையன்விளை, திருநெல்வேலி, நாகர்கோவில் என அனைத்து பஸ்களும் கிழக்கு கடற்கரை சாலை பைபாஸ் ரோடு வழியாக 6 கி.மீ., துாரம் சுற்றி செல்கிறது.
கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் கண்காட்சியாக இருக்கும் பாலத்தில் சி.ஐ.டி.யு., வினர் செப்., 26 ல் டூவீலர் ஓட்டும் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்கு பிறகாவது நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தினை திறப்பார்களா, எப்போதும் போல் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களா.