/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரக்கன்றுகளுக்கு டிராக்டரில் தண்ணீர் பாய்ச்சும் பணியாளர்
/
மரக்கன்றுகளுக்கு டிராக்டரில் தண்ணீர் பாய்ச்சும் பணியாளர்
மரக்கன்றுகளுக்கு டிராக்டரில் தண்ணீர் பாய்ச்சும் பணியாளர்
மரக்கன்றுகளுக்கு டிராக்டரில் தண்ணீர் பாய்ச்சும் பணியாளர்
ADDED : ஏப் 20, 2024 04:59 AM

கமுதி: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார்--கமுதி ரோடு சித்திரங்குடி பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் மரக்கன்றுகளுக்கு டிராக்டரில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
முதுகுளத்துார்--கமுதி ரோடு கீழக்காஞ்சிரங்குளம் அருகே ரோட்டோரத்தில் புல்வாய்க்குளம் பஸ் ஸ்டாப் வரை புங்கன், புளியமரம், வேப்ப மரம் உள்ளிட்ட நிழல் தரும் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நட்டனர்.
அதன் பின் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். ஒருசில மரக்கன்றுகள் மட்டும் கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்க மூடி மறைக்கப்பட்டுஉள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிதாக வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் பட்டுப்போகின்றன. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் டிராக்டரில்சுழற்சி முறையில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

