ADDED : பிப் 22, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி மற்றும் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைவதற்காக ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் இன்று(பிப்.,23) நடக்க உள்ளது.
பெயர், முகவரி, போட்டோ திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், அலைபேசி எண் இணைப்பு மற்றும் ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட வேலைகளை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நீட் தேர்வு எழுத மாணவர்கள் தங்களின் ஆதாரில் உள்ள பெயருக்கு முன்னால் தந்தையின், இன்சியல் பதிவிட வேண்டி வீண் அலைச்சலை தவிர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடப்பதாக தெரிவித்தனர்.

