/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு
/
நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு
நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு
நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு
ADDED : ஆக 07, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: -பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி அம்மன் தேரோட்டம் நடந்தது.
நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது.
இங்கு ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று காலை அம்மன் தேரோட்டம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தில் நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதனை தொடர்ந்து நாளை(ஆக.8) காலை 8:00 மணிக்கு அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
இரவு மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.9 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.