ADDED : ஜூலை 28, 2024 11:51 PM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே குலமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செபஸ்டியான் தலைமையில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தர்மராஜ், வினோத் பாபு பங்கேற்றனர்.
பெருமாள்மடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அன்பரசி தலைமையில் ஆசிரியர் திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் சோபனா தலைமையில் உதவி ஆசிரியர் சத்யராஜ் உட்பட உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜூ தலைமை வகித்தார். மாணவர்கள் அப்துல் கலாம் முகமூடி அணிந்து பங்கேற்றனர். மேலாண்மை குழு தலைவி ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாத்திமா கனி, ஆசிரியர்கள் அன்பில் அமலன், ஜான்சிராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனம்பாள் தலைமையில் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமையில் நிர்வாகி ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.