/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை
/
மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை
ADDED : ஜூலை 07, 2024 01:54 AM
சாயல்குடி: சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி அதிகளவு குடிநீரை உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளில் சட்ட விரோதமாக அதிக திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை பெரிய டேங்குகளில் ஏற்றும் செயல் அடிக்கடி அரங்கேறுகிறது.
இதனால் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் பிரதான சாலையோர குழாய்களில் குடிநீர் கிடைக்காமல் தடை ஏற்படுகிறது. இது குறித்து சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார் வந்ததால் நேற்று முன்தினம் சதுரயுகவல்லி நகரில் உள்ள வீடுகளில் இரு மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்து வரும் நிலையில் லாப நோக்கில் சுயநலமாக பிறருக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உறிஞ்சுவது சட்டவிரோதம்.
எனவே சாயல்குடி நகர் முழுவதும் வீடுகள் தோறும் ஆய்வு செய்யப்பட்டு மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரிய வந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபராத விதிக்கப்படும் என்றனர்.