/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில்நடிகர் சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்
/
ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில்நடிகர் சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்
ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில்நடிகர் சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்
ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில்நடிகர் சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்
ADDED : மே 08, 2024 01:09 AM

ராமநாதபுரம்:ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். வழக்கு மே 20க்கு தள்ளிவைக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பிள்ளையார் கோவில்பகுதியைசேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளம்நடத்தி வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக வங்கியில் ரூ.15 கோடிகடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இதையறிந்த நடிகர் சீனிவாசன் 'தான்கடன் வாங்கித் தருவதாகவும்.
அதற்கு 15 லட்சம் முத்திரைகட்டணம் செலுத்தவேண்டும் 'என கேட்டு முனியசாமியிடம் ரூ.15 லட்சம் வாங்கியுள்ளார்.
பணத்தை பெற்றவர் கடன் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். பணத்தைதிருப்பி கேட்ட போது ரூ.14 லட்சத்திற்கான செக்கை முனியசாமியிடம் சீனிவாசன் வழங்கினார்.வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பியது.
இது தொடர்பாக முனியசாமி, ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நடிகர் சீனிவாசன் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அதன் பின் நீதிமன்றத்தில் சரணடைந்ததால் வழக்குதொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணையில் நடிகர் சீனிவாசன் நேரில் ஆஜரானார்.
அவரது தரப்பு வழக்கறிஞர் மாற்றம் செய்யப்பட்டு புதிய வழக்கறிஞர் ேஷக் இப்ராஹிம், 'சாட்சிகள் விசாரணை சரிவர நடத்தப்படவில்லை. மீண்டும் சாட்சிகள் விசாரணை நடத்த வேண்டும் 'என்றார்.
முனியசாமி தரப்பு வழக்கறிஞர் கிருபாகரன் வேண்டுகோளை ஏற்று பதில்மனு தாக்கல் செய்ய மே 20க்கு வழக்கை தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.

