/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகர் சீனிவாசன் செக் மோசடி வழக்கு; ஏப்.22க்கு தள்ளிவைப்பு
/
நடிகர் சீனிவாசன் செக் மோசடி வழக்கு; ஏப்.22க்கு தள்ளிவைப்பு
நடிகர் சீனிவாசன் செக் மோசடி வழக்கு; ஏப்.22க்கு தள்ளிவைப்பு
நடிகர் சீனிவாசன் செக் மோசடி வழக்கு; ஏப்.22க்கு தள்ளிவைப்பு
ADDED : ஏப் 11, 2024 06:13 AM

ராமநாதபுரம் : -செக் மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில்ஆஜராகாததால்மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கை ஏப்.22க்கு தள்ளி வைத்தார்.
தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 55. இவர் வங்கி கடன் பெறுவதற்காக நடிகர் சீனிவாசனிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
கடன் பெற்றுத்தரவில்லை. கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பி கேட்டுள்ளார்.
சீனிவாசன் 14 லட்சம் ரூபாய்க்கு வங்கி காகோசலை வழங்கினார். வங்கியில் பணம் இல்லாததால் கசோலை திரும்பி வந்தது.
ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முனியசாமி வழக்கு தொடர்ந்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகர் சீனிவாசன் நேற்று ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கை ஏப்.22க்குதள்ளி வைத்து உத்தரவிட்டார்.