/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாக்க கூடுதல் பாறாங்கல் குவியல்
/
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாக்க கூடுதல் பாறாங்கல் குவியல்
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாக்க கூடுதல் பாறாங்கல் குவியல்
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாக்க கூடுதல் பாறாங்கல் குவியல்
ADDED : ஏப் 27, 2024 02:05 AM

ராமேஸ்வரம்:தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை ராட்சத கடல் அலையில் இருந்து பாதுகாக்க மேலும் கூடுதலாக பாறாங்கற்கள் குவிக்கப்படுகிறது.
தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயலில் ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அன்று முதல் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில் மோடி பிரதமரானதும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைத்து 2017ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் அரிச்சல்முனையில் எழுந்த ராட்சத அலையால் தேசிய நெடுஞ்சாலை சேதமானது. இதையடுத்து ரோட்டின் இருபுறமும் பாறாங்கற்கள் கொட்டி பாதுகாத்தனர். இருப்பினும் சமீபத்தில் எழுந்த ராட்சத அலையால் பாறாங்கற்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. ஜூனில் துவங்கும் தென்மேற்குப் பருவக் காற்றில் எழும் ராட்சத அலையால் சாலை சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க அத்துறையினர் கடந்த இரு நாட்களாக லாரியில் கொண்டு வந்து பாறாங்கற்களை தனுஷ்கோடி சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனை மண் அள்ளும் இயந்திரம் மூலம் கடலோரத்தில் பரப்ப உள்ளனர்.