/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் கூடுதல் மின் உபகரணங்கள் தேவை தொடர் மின்தடை

ADDED : மே 06, 2024 12:30 AM
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ரெகுநாதபுரம் மற்றும் 10 கி.மீ., சுற்றளவு கிராமங்களுக்கு ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது.
பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு ஏற்ப மின் சப்ளை இல்லாததால் தொடர் மின் தடை ஏற்படுகிறது.
எனவே கூடுதல் திறனுள்ள மின் உபகரணங்களை ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் பொருத்திட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் கோடை காலத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.