ADDED : மே 09, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.
ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயில் சன்னதி தெருவில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் புரோகிதர்கள் கணபதி பூஜை, கோ பூஜை செய்து சாந்தி பாடம் பாராயணத்துடன் துவக்கினர்.
இந்த ஜெயந்தி விழா மே 12 வரை காஞ்சி மடத்தில் நடக்கும். இதனையொட்டி நேற்று ஏராளமான பக்தர்களுக்கு நீர், மோர் பழங்கள் வழங்கப்பட்டது. இதில் ராமேஸ்வரம் காஞ்சி மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.