/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க.,வை கண்டித்து மக்களிடம் அ.தி.மு.க., நோட்டீஸ் வழங்கல்
/
தி.மு.க.,வை கண்டித்து மக்களிடம் அ.தி.மு.க., நோட்டீஸ் வழங்கல்
தி.மு.க.,வை கண்டித்து மக்களிடம் அ.தி.மு.க., நோட்டீஸ் வழங்கல்
தி.மு.க.,வை கண்டித்து மக்களிடம் அ.தி.மு.க., நோட்டீஸ் வழங்கல்
ADDED : ஜூலை 12, 2024 04:15 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், போதை விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களிடம் வழங்கினர்.
ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் மாவட்டச்செயலாளர் முனியசாமி தலைமையில் அ.தி.மு.க.,வினர் வியாபாரிகள், பொதுமக்களிடம் தி.மு.க., அரசின் அவலங்களையும், போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், ராமநாதபுரம் நகர செயலாளர் பால்பாண்டி, ராம்கோ சேர்மன் (பொ) தஞ்சி சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.