ADDED : ஆக 29, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடியில் அ.தி.மு.க., சார்பில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து விமர்சனம் செய்தார்.
இதனை கண்டித்து நேற்று பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்பு அ.தி.மு.க., வினர் அண்ணாமலை உருவப் படத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவரது உருவப் பொம்மையை எரித்த போது போலீசார் தடுத்து தீயை அணைத்தனர்.
பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகரன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் வின்சென்ட் ராஜா, நகர் செயலாளர் ஜமால், நகராட்சி கவுன்சிலர் வடமலையான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

