/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்
/
திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்
திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்
திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்
ADDED : மார் 04, 2025 06:27 AM

திருவாடானை,: திருவாடானை தாலுகாவில் அறுவடைக்கு பின் சேகரிக்கப்படும் வைக்கோல் லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கிறது.
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரம் மூலம் அறுவடை செய்யபடுகிறது. அதில் நெல், வைக்கோல் என தனித்தனியாக பிரித்து எடுக்கபடுகிறது.
இதையடுத்து வயல்களிலிருந்து வைக்கோலை கட்டுகளாக தயார்படுத்தி விற்பனைக்காக கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லபடுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது - விவசாயிகளிடமிருந்து ஒரு கட்டு ரூ.20க்கு வாங்குகின்றனர். அக் கட்டுகளை லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்புகின்றனர். அங்கு கால்நடை தீவணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழக வைக்கோல் கேரளாவில் கிராக்கிய இருப்பதால் நல்ல லாபத்திற்கு விற்பனை செய்யப் படுகிறது.
லாரிகளில் ஏற்றி செல்லபடும் வைக்கோல் அதிக உயரத்திற்கு ஏற்றி செல்லவதால் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப் படுகிறது என்றனர்.