ADDED : செப் 03, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பால்சாமி, தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். முதுகுளத்துார் வட்டாரத்தில் பருவமழை காலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்கவும், 100 நாள் வேலையில் உள்ள ஊதியத்தை முழுமையாக வழங்கவும், விவசாய தொழிலாளர் வாரியம் அமைக்க கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத் தலைவர் ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் அங்குதன், தாலுகா பொருளாளர் முருகேசன், விவசாயிகள் பங்கேற்றனர்.