/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் இயந்திரங்கள் கருவி பராமரிப்பு முகாம்
/
வேளாண் இயந்திரங்கள் கருவி பராமரிப்பு முகாம்
ADDED : செப் 01, 2024 11:46 PM

பரமக்குடி: பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் நடந்தது.
வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். வேளாண் விற்பனை, வணிகத்துறை செயலாளர் ராஜா வரவேற்றார்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி வாழ்த்தினார்.
அப்போது உழவன் செயலி, இ--வாடகையில் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில், அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெற்றுக் கொள்ளும் முறை குறித்து விளக்கி பேசினர்.
விவசாயிகளுக்கு இயந்திரங்களின் இயக்கம், பராமரிப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர்கள் மனோகரன், நாகராஜன், இயந்திர விற்பனையாளர்கள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.