ADDED : ஜூன் 23, 2026 05:11 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பூமிநாதன், மாவட்ட தலைவர் கதிர்வேலு, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தனர். கிராமங்களில் விபிஜி ராம்ஜி வேலை திட்டத்தை மேலும் பலப்படுத்தி ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கி இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
கூட்டுறவு வங்களில் பயிர்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அதன் பிறகு தங்களது கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர்.––––
