/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எய்ம்ஸ் சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு தேசிய கருத்தரங்கம்
/
எய்ம்ஸ் சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு தேசிய கருத்தரங்கம்
எய்ம்ஸ் சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு தேசிய கருத்தரங்கம்
எய்ம்ஸ் சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு தேசிய கருத்தரங்கம்
ADDED : செப் 07, 2024 05:12 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி அரங்கில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி கண் மருத்துவப்பிரிவு சார்பில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி தேசிய கருத்தரங்கம் நடந்தது.
எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் தலைமை வகித்தார். மருத்துவக்கல்லுாரி பொறுப்பு பேராசிரியர் கணேஷ்பாபு முன்னிலை வகித்தார். கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ராஜா வரவேற்றார். டாக்டர்கள் ஹரிக்குமார், சீமா, சியாமளா பங்கேற்றனர்.
இந்திய மருத்துவர் சங்கத்தின் ராமநாதபுரம் கிளை தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் பங்கேற்றார். சென்னை மருத்துவக்கல்லுாரி கண்மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பிரமிளா கண்தானம் செய்யும் வழி முறைகள் பற்றி சிறப்பு காணொலி மூலம் விளக்கினார்.
மதுரை மருத்துவக்கல்லுாரி கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் கவிதா கண்தானம் பற்றிய மூட நம்பிக்கைகள், கண்தானத்தின் அவசிம் குறித்து வலியுறுத்தினார். எய்ம்ஸ் ஐதராபாத் கண் மருத்துவத்துறை இணை பேராசிரியர் சித்தாராம், கேரள மாநிலம் பாலக்காடு அரசு மருத்துவமனை கண்மருத்துவத்துறை தலைவர் ஸ்மிதா கண்தானம் செய்வதற்கான தேவைகள், கண்ணின் கருவிழி குறித்து பேசினார்.
அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி சிறப்பு டாக்டர் தேஜஸ்வி கண் அறுவை சிகிச்சையில் உள்ள நவீன முறைகள் குறித்து பேசினார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண் டாக்டர் வீனஸ்குமாரி கண் அறுவை சிகிச்சைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பேசினார்.
கண்தானம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எய்ம்ஸ் டாக்டர் ராமதாஸ் பேசினார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு டாக்டர் சுபாசங்கரி நன்றி கூறினார். --------------