/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாய நிலம் அருகே மதுக்கடை அமைக்க ஏர்வாடி மக்கள் எதிர்ப்பு
/
விவசாய நிலம் அருகே மதுக்கடை அமைக்க ஏர்வாடி மக்கள் எதிர்ப்பு
விவசாய நிலம் அருகே மதுக்கடை அமைக்க ஏர்வாடி மக்கள் எதிர்ப்பு
விவசாய நிலம் அருகே மதுக்கடை அமைக்க ஏர்வாடி மக்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 25, 2025 07:11 AM

ராமநாதபுரம்: ஏர்வாடியில் இருந்து கொம்பூதி வழியாக ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் விவசாய நிலங்கள் அருகே மதுக்கடை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏர்வாடி தேவேந்திர குல வேளாளர் கிராம நலச்சங்கத்தினர், ஏராளமான பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள மதுக்கடையை தற்போது கொம்பூதி வழியாக ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் விவசாய நிலங்கள் நிறைந்த இடத்தில் அமைக்கும் பணி நடக்கிறது.
இதன் அருகே பெண்கள் குளிக்கும் குளம் உள்ளது. கால்நடை மேய்த்தல், களையெடுத்தல், விறகு வெட்டுதல் போன்ற விவசாயப்பணிகள் நடக்கிறது. மது பிரியர்களால் பெண்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே மதுக்கடை அமைக்கும் பணியை நிறுத்த கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.