/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுதமியிடம் மோசடி செய்த வழக்கு அழகப்பனுக்கு போலீஸ் காவல்
/
கவுதமியிடம் மோசடி செய்த வழக்கு அழகப்பனுக்கு போலீஸ் காவல்
கவுதமியிடம் மோசடி செய்த வழக்கு அழகப்பனுக்கு போலீஸ் காவல்
கவுதமியிடம் மோசடி செய்த வழக்கு அழகப்பனுக்கு போலீஸ் காவல்
ADDED : ஆக 22, 2024 02:42 AM

ராமநாதபுரம்:நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடிக்கு நிலம் வாங்கி தருவதாகக்கூறி மோசடி செய்த வழக்கில் காரைக்குடி சினிமா பைனானசியர் அழகப்பனை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ராமநாதபுரம் நீதிமன்றம் அனுமதியளித்தது.
தன்னிடம் பழகிய காரைக்குடியை சேர்ந்தசினிமா பைனான்சியர் அழகப்பன் நிலம் வாங்கித்தருவதாக ரூ.3.16 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக நடிகை கவுதமி ராமநாதபுரம் எஸ்.பி.,சந்தீஷ்சிடம் புகார் அளித்தார்.
அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், மகன், மருமகள், புரோக்கர் உட்பட 13 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஆக.12 ல் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2 ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகை கவுதமி நேரில் ஆஜராகி வழக்கறிஞர் நாராயணன் மூலம் அழகப்பனுக்கு ஜாமின் வழங்க கூடாது என மனு செய்தார்.
இந்த மனுவை மாஜிஸ்திரேட் பிரபாகரன் தள்ளி வைத்திருந்தார்.அழகப்பன் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் மற்றொரு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை கவுதமி வழக்கு விசாரணையில் அழகப்பனை ஆக.20ல் நேரில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி அழகப்பனை நேற்று இந்நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் மனு செய்திருந்தார். இதையடுத்து அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் பிரபாகரன் அனுமதியளித்தார்.