/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அகில இந்திய சாப்ட் பால் கிரிக்கெட் போட்டிகள் 28 அணிகள் பங்கேற்பு
/
அகில இந்திய சாப்ட் பால் கிரிக்கெட் போட்டிகள் 28 அணிகள் பங்கேற்பு
அகில இந்திய சாப்ட் பால் கிரிக்கெட் போட்டிகள் 28 அணிகள் பங்கேற்பு
அகில இந்திய சாப்ட் பால் கிரிக்கெட் போட்டிகள் 28 அணிகள் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2024 03:54 AM

பரமக்குடி, : பரமக்குடி அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் அகில இந்திய சாப்ட் பால் சாம்பியன்ஷிப் 2024 கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது.
ராகுல் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி மற்றும் பார்த்திபனுார் பாண்டியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து இந்தியன் சாப்ட் பால் கிரிக்கெட் பெடரேஷன் ஒத்துழைப்புடன் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, அந்தமான், கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், சதன் ரயில்வே, ஆந்திரா, ம.பி., உ.பி., உட்பட 16 ஆண்கள் அணிகள் பங்கேற்கிறது. தமிழ்நாடு, அந்தமான், பீகார், மகாராஷ்டிரா உட்பட 12 பெண்கள் அணியினர் பங்கேற்றுள்ளனர்.
ஆக.12ல் துவங்கி பகல், இரவாக நடக்கும் நிலையில் இன்று(ஆக.15)இறுதி போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெறும் இரு அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.60 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை பாண்டியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சேர்மன் மலைச்சாமி, சேலம் ராகுல் ஸ்போர்ட்ஸ் சேர்மன் விஜயலட்சுமணன் மற்றும் கரூர் உடற்கல்வி அலுவலர் ராஜேந்திரன் செய்துள்ளனர்.