/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொந்தம்புளி ஊருணி மடைக்கு நிதி ஒதுக்கீடு
/
பொந்தம்புளி ஊருணி மடைக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : ஏப் 12, 2024 04:20 AM
பெருநாழி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பொந்தம்புளி ஊருணி மடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.
பெருநாழி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் ஊருணி மடை சேதமடைந்ததால் முழுமையாக தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாகிறது.
பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பொந்தம்புளி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் ஊருணி அமைந்துள்ளது. 3 ஏக்கரில் வாழவந்தாள்புரம் ஊருணியில் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் உரிய முறையில் தண்ணீர் சேகரிக்க வழியின்றி உள்ளது. வரத்து கால்வாய் அருகே உள்ள மடை சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த வழியின்றி சிரமப்படுகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் ஜன.,ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம் கூறுகையில், வாழவந்தாள்புரம் ஊருணி மடை உடைந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது. அதனை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நிர்வாக அனுமதியும் நிதி ஒதுக்கீடும் கிடைத்துஉள்ளது. எனவே தரமான கட்டுமானப்பணி செய்து மடையை அமைத்து தர வேண்டும் என்றார்.

