/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எப்போதும் மாணவனாகவே இருப்பேன் என கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
/
எப்போதும் மாணவனாகவே இருப்பேன் என கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
எப்போதும் மாணவனாகவே இருப்பேன் என கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
எப்போதும் மாணவனாகவே இருப்பேன் என கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
ADDED : ஏப் 16, 2024 03:58 AM

கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பேச்சு
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் மேகலா தலைமை வகித்தார். மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். 604 பேர் பட்டங்களை பெற்றனர். 37 மாணவர்கள் பல்கலை தர வரிசை பெற்ற நிலையில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
பட்டம் மற்றும் சான்றிதழ்களை திருநெல்வேலி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:
அறிவியல் உலகில் ஆண், பெண் சரி சமமாக வாழ கல்வி அவசியம். பெண்கள் முன்னேற்றம் கல்வியால் மட்டுமே சாத்தியம். பட்டம் பெற காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்று வரை வாழ்ந்த கனவு வாழ்க்கையில் இருந்து நிஜ வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க இருக்கிறீர்கள்.
போட்டி நிறைந்த உலகில் தகுதி என்ற தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்ற வேண்டும். தாய் நாடு, தாய் மொழி மீது பற்று கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பு வாழ்க்கையில் அவசியமானது.
அந்தந்த துறை சார்ந்த சாதனையாளர்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும்.
தனி மனித ஒழுக்கமே வாழ்க்கையை தீர்மானிக்கும். எந்த சக்தியும் என்னை மீறி தீண்டாது என்ற மன உறுதியுடன் பெண்கள் இருக்க வேண்டும்.
எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவத்தை விடுத்து எப்போதும் மாணவனாகவே இருப்பேன் என கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

