/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் வசதிகள் இல்லாத அமரர் பூங்காக்கள்
/
திருப்புல்லாணியில் வசதிகள் இல்லாத அமரர் பூங்காக்கள்
திருப்புல்லாணியில் வசதிகள் இல்லாத அமரர் பூங்காக்கள்
திருப்புல்லாணியில் வசதிகள் இல்லாத அமரர் பூங்காக்கள்
ADDED : ஏப் 06, 2024 04:13 AM
திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் ஒன்றியத்தில் உள்ள மயானங்களில் அமரர் பூங்கா பராமரிப்பு இன்றி உள்ளன.
திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் ஊராட்சியின் சார்பில் மயானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அமரர் பூங்காக்களில் முறையான பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
இடுகாட்டில் உள்ள தகன மேடை முழுவதும் பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. இறுதிச் சடங்கு செய்வதற்கான கிணறு உள்ளிட்ட தண்ணீர் வசதி ஏதுமின்றி உள்ளது.
இரவு நேரங்களில் மின்கம்பங்களில் அப்பகுதிகளில் போதிய வெளிச்சமின்றி இருசூழ்ந்தும் காணப்படுகிறது.
எனவே திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள அமரர் பூங்காக்களை முறையாக பராமரித்து தண்ணீர் வசதி மின் விளக்கு உள்ளிட்டவைகளை அமைத்திடவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

