ADDED : ஜூன் 01, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையில் தமிழ் முஸ்லிம் பரிபாலன பைத்துல்மால் சார்பில் அனைத்து சகோதர சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது.
முஸ்லிம் தர்ம பரிபாலன சபா தலைவர் ஹாஜி தவுபீக் கரீம் தலைமை வகித்தார். செயலாளர் சாகுல் ஹமீது, உப தலைவர் சாகுல் ஹமீது கனி, பைத்துல்மால் புரவலர் முகமது ஷாஜஹான் முன்னிலை வகித்தனர்.
பைத்துல் மால் தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் முகமது ரிபாய், டிரஸ்சரர் ரஹ்மத்துல்லா, முகம்மதியா பள்ளிகளின் தாளாளர்அல்ஹாஜ் அகமது கபீர், செயலாளர் செய்யது அகமது கபீர், மற்றும் ஜமாத்தார்கள், வாலிப முஸ்லிம் தமிழ் கழக இளைஞர்கள் பங்கேற்றனர்.