/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசாள வந்த அம்மன் முளைப்பாரி ஊர்வலம்
/
அரசாள வந்த அம்மன் முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஆக 01, 2024 04:24 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழா ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் முளைப்பாரிகளை வளர்த்தனர்.
பக்தர்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேற்று முன்தினம் இரவு கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
நேற்று காலை 10:30 மணிக்கு அரசாள வந்த அம்மன் கோயிலில் இருந்து துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பூவானிக்கரை கூ.கூ.விநாயகர் கோயிலில் முளைப்பாரிகளை வைத்து வழிபாடு செய்தனர்.
பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகளை அரசூரணி குளத்து நீரில் கரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முளைப்பாரி ஊர்வலத்தில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஹிந்து சமய மன்றத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.