/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சியில் துணை தீயணைப்பு நிலையம் தேவை
/
கீழக்கரை நகராட்சியில் துணை தீயணைப்பு நிலையம் தேவை
ADDED : மே 29, 2024 04:54 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிப்பதால் துணை தீயணைப்பு நிலையம் தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட தெருக்களும், குறுகிய சந்துகளும் அதிகம் உள்ளன. பெரும்பாலானவை மாடி கட்டடங்களாகவும், வணிக வளாகங்களும் அதிகம் உள்ளன. இந்நிலையில் நகரின் பாதுகாப்பு கருதி கீழக்கரையில் துணை தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை சமூக ஆர்வலர் ஹனீப் முகமது சுபியான் கூறியதாவது:
கீழக்கரை அருகே 10 கி.மீ.,ல் ஏர்வாடியிலும், 18 கி.மீ.,ல் ராமநாதபுரத்திலும் தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் இல்லை. எனவே அதிகளவு கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், பள்ளிகள், குறுகிய தெருக்கள் நிறைந்த இடத்தில் பாதுகாப்பு கருதி துணை தீயணைப்பு நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அவசர காலங்களில் பேரிடர் மற்றும் மீட்பு பணிகளுக்காகவும் தீ விபத்து உள்ளிட்டவைகளுக்காகவும் தீயணைப்பு நிலையத்தின் சேவை முக்கியமானதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துணை தீயணைப்பு நிலையத்தை கீழக்கரை நகர் பகுதிக்குள் ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.