/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் ஸ்டேஷனில் ரகளை முன்னாள் ராணுவ வீரர் கைது
/
போலீஸ் ஸ்டேஷனில் ரகளை முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : ஜூலை 04, 2024 01:14 AM
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பஸ் ஸ்டாண்ட் அருகே ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டவர்கள் ரோந்து போலீசாரையும் தாக்கினர்.
இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்டு நேற்று போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தனர்.
கடலாடியை சேர்ந்த ராணுவ வீரர் திருக்குமரன் மற்றும் தி.மு.க., நிர்வாகி முரளிதரன், பாலமுருகன், மகாலிங்கம் ஆகியோர் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்துள்ளனர்.
அப்போது ரோந்து வந்த கடலாடி போலீசார் புலித்தேவன், சிவமுனியசாமியை தாக்கி சீருடையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
இதில் மகாலிங்கம் மட்டும் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை தேடப்பட்டு வரும் முரளிதரன் உறவினர் மதுரையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்லப்பாண்டி 61, கடலாடி போலீஸ் ஸ்டேஷன் வந்து எப்.ஐ.ஆர்., நகல் கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து பணி செய்ய விடாமல் தடுத்த செல்ல பாண்டியன் மீது கடலாடி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.