ADDED : ஜூன் 02, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அரிசிக்குழுதான் கிராமம் அருகே நல்லக்க நாச்சியம்மன் கோயில் உள்ளது. இது அரியமங்கலம், வண்ணாங்குளம், நல்லுார், குண்டுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குல தெய்வமாக உள்ளது.
பக்தர்கள் அன்னதானம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக அரியமங்கலம் கிராம மக்கள் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய அன்னதானம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
அரியமங்கலம் ஊராட்சி தலைவர் ராமையா தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பூமிநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை நடந்தது.