/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனைகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
/
ஆனைகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
ஆனைகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
ஆனைகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
ADDED : ஏப் 18, 2024 05:11 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரி ஊராட்சி ஆனைகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
களரி அருகே ஆனைகுடியில் தனியார் உப்பு நிறுவனத்தை தடைசெய்யக் கோரி கிராம வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பளத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீரும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் கீழக்கரை தாசில்தார் பழனி குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமூகத் தீர்வு காணப்பட்டது. போராட்டத்தினை வாபஸ் பெற்று அனைவரும் ஓட்டளிப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.