/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படுகிறார் அண்ணாமலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி

ADDED : ஜூன் 02, 2024 03:30 AM
ராமநாதபுரம்: கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படுகிறார் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அ.தி.மு.க., முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கூறியதாவது:
தமிழக அரசியலில் கடுகளவு கூட அனுபவம் இல்லாத நிலையில் அண்ணாமலை கடலளவு பேராசைப்படுகிறார். அதனால் தான் அவரது சிந்தனை, பேச்சு, அணுகுமுறை வெறுக்கத் தக்கதாக இருக்கிறது. பா.ஜ., அனுபவம் வாய்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழக தலைவர் அனுபவம் இல்லாதவர்.
அவரது பதவி நியமன பதவி தான். ஆனால் அவர் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அ.தி.மு.க., எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டு 52 ஆண்டுகள் சேவை செய்த கட்சியாகும். தேர்தல் முடிவுகளே ஜூன் 4ல் தான் வரவுள்ளது.
அதற்குள் அ.தி.மு.க., வின் ஜாதகத்தை அண்ணாமலைகணிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக மக்களுக்கு தான் அ.தி.மு.க., ஜாதகத்தை கணிக்கும் அதிகாரம் உள்ளது.
தமிழக அரசு அனைத்து உரிமைகளையும் இழந்து வருகிறது. காவிரியில் மேகதாது அணை, முல்லை பெரியாற்றில் புதிய அணை, பாலாற்றில் அணை, சிலந்தியாற்றில் தடுப்பணை எனஅணைகளை போட்டு வருகின்றனர்.
முல்லை பெரியாற்றில் உரிமைகளை இழந்து வருகிறோம். உரிமை மீட்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. 40 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பழனிசாமி அடையாளம் காட்டுபவர் தான் பிரதமராவார் என்றார்.