ADDED : மார் 10, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள தொருவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பஜீருதீன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வில்சன் சமாதானக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். அதிக மதிப்பெண், பல்வேறு விளையாட்டுகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளியின் ஆலோசகர் சிங்கப்பூர் வாழ் முன்னாள் மாணவர் அர்ஜுனன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், மேலாண்மைக் குழு தலைவி சீதாலட்சுமி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.