ADDED : ஏப் 17, 2024 06:14 AM

அ நிறம் | அளவு
கீழக்கரை, : கீழக்கரை கிழக்கு நாடார் தெரு பத்திரகாளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் விழா நடந்தது.
கடந்த ஆண்டு புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு நடந்த வருடாபிஷேக விழாவில் மூலவர் பத்திரகாளி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
