நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே மூலக்கரைப்பட்டியில் செல்வ கருப்பணசுவாமி கோயில் 16ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது. கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அசைவ விருந்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்பு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட குலதெய்வமாக வழிபடும் மக்கள், கமுதி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.