ADDED : செப் 10, 2024 05:12 AM

அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சஷ்டி பூஜை நடந்தது.
நேற்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை மூலவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வழிகாட்டி பாலமுருகன் அருள்பாலித்தார்.
பஞ்சமுக தீபாராதனை மற்றும் ஜோடஷ அலங்கார பூஜைகள் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் விஸ்வநாதன் செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
