ADDED : ஜூன் 24, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் முத்தங்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் பூஜை செய்யப்பட்ட புனித நீர், மூலவருக்கு ஊற்றப்பட்டு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
