/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்: யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்: யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்: யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்: யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 10, 2024 11:56 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முகமதுமுக்தார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் செல்வி, பி.டி.ஓ., கணேசன், மேலாளர் ஜெயமுருகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர் மதிவாணன்: திருவாடானை அரசு மருத்துவமனை, வெள்ளையபுரம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லை. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை டாக்டர் வருகிறார். இதனால் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே திருவாடானை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்ப வேண்டும்.
கவுன்சிலர் கதிரவன்: ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர், மின்சாரம் பிரச்னை தீரவில்லை.
தலைவர் முகமது முக்தார்: அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.2950 கோடி செலவில் புதிய காவிரி குடிநீர் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரிவித்தனர்.
ஆனால் 18 மாதங்களை கடந்தும் இன்னமும் இத் திட்டம் நிறைவேறவில்லை. மேலும் இந்த ஒன்றியத்தில் கிராம சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகள் விரிவுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
என தீர்மானங்களை நிறைவேற்றி கலெக்டரின் பார்வைக்கு அனுப்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிநாதன் நன்றி கூறினார்.